முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சீதாவாக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
வலுசக்தி அமைச்சர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதால், மற்றுமொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியான பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பது பொருத்தமற்றது என கம்மன்பில தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.