இந்த நெருக்கடியான காலத்தில் இந்தியாவிடமிருந்து கடனுதவி பெரும் பாக்கியம் இலங்கைக்கு கிடைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியா இவ்வாறான உதவிகளை வழங்குவது இதுவே முதல் தடவை என்பதால் இது விசேடமானதாகும் எனவும், இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாட்டில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட பொறுப்பு வெளிவிவகார அமைச்சருக்கு அல்லது நிதி அமைச்சருக்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடினமான காலத்திலும் இலங்கைக்கு உதவியமைக்காக பங்களாதேஷுக்கும் ரணில் நன்றி தெரிவித்தார்.