Thursday, January 16, 2025
26 C
Colombo
சினிமாநயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

அவர்கள் இந்த பட தயாரிப்பு நிறுவனம் மூலம் பல்வேறு திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், இந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியான ‘கூழாங்கல்’ என்ற திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது சென்னை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

ரவுடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தங்கள் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என பெயர் வைத்திருப்பது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles