Friday, September 5, 2025
26.7 C
Colombo
சினிமாசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் யுக்ரைன் நடிகை

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் யுக்ரைன் நடிகை

சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்த படத்தின் கதாநாயகியாக யுக்ரைன் நடிகையான மரியா ரியாபோஷாப்கா ஒப்பந்தமாகியுள்ளார்.

குறித்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்.

சிவகாரத்திகேயனுக்கு வில்லனாக பிரேம்ஜியும், முக்கிய கதாபாத்திரங்களில் ராஷி கண்ணா, சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமன் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, சென்னை, புதுவை மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles