தளபதி விஜய் என்னை ஒருநாள் அழைப்பார் என நம்பிக்கையோடு காத்திருப்பதாக பிரபல இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ஜொலியோ ஜிம்கானா என்ற பாடலை அவர் புகழ்ந்துள்ளார்.
இதன்போது ரசிகர் ஒருவர் தளபதியை வைத்து நீங்கள் எப்போது ஒரு காதல் படம் இயக்குவீர்கள் என கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அல்போன்ஸ் புத்திரன், “‘பிரேமம்’ திரைப்படம் வெளியானவுடன் தமிழகத்திலிருந்து என்னை முதலில் வாழ்த்திய தளபதி விஜய்யை நேரில் சந்தித்தேன். கண்டிப்பாக ஒரு நாள் அவர் என்னை ஒரு திரைப்படம் இயக்க அழைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.
‘நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன், அதன்பிறகு ’பிரேமம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது அவர் பகத் பாசில், நயன்தாரா நடித்து வரும் ’பாட்டு’ மற்றும் பிரித்விராஜ், நயன்தாரா நடித்து வரும் ‘கோல்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.