பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ராதேஷ்யாம் திரைப்படம் அண்மையில் வெளியானது.
இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும், படம் மிகவும் மெதுவாக நகர்ந்ததால் ரசிகர்களை கவரவில்லை.
இதனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை வசூல் அளவில் சந்தித்ததாக கூறப்பட்டது .
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
நடிகர் பிரபாஸ் குறித்த படத்திற்காக வாங்கிய 100 கோடி ரூபா சம்பளத்தில் 50 கோடி ரூபாவை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.