ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.
இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தற்போது ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.