நடிகர் கருணாஸ் ‘வாடி வாசல்’ திரைப்படத்தில் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றவுள்ளார்.
இது தொடர்பில் நடிகர் கருணாஸ் தெரிவித்ததாவது,
‘கிராமிய கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது திரைத்துறை தான்.
தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன். ஆற்றல்மிகு இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு.
பல திரைப்படங்களில் இப்போது நான் நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறைசாற்றும் இந்த படத்தில் பணியாற்றுவது பெருமை. ராமனுக்கு அணிலாக இருப்பதை போல, இந்த வெற்றி அணியில், வெற்றிமாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன். நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குனர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது’ என கூறியுள்ளார்.