மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறுதியாக நடித்த ‘ஜேம்ஸ்’ திரைப்படம் அவருடைய பிறந்தநாளன்று (17) வெளியானது.
கன்னட திரையுலகில் பிரபல நடிகரான அவர் கடந்தாண்டு அக்டோபர் 29 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில், புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ படம் பல திரையரங்குகளில் அவருடைய பிறந்தநாளன்று வெளியாகி உள்ளது.
அத்துடன், ரசிகர்கள், திரையுலகினர் உட்பட பலரும் புனித் ராஜ்குமாரை அவரது பிறந்த நாளன்று நினைவு கூர்ந்து பதிவுகளை இட்டு வருகின்றன