6 – 12 மாத காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக, கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு, நீர்விநியோகத்தை துண்டிக்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந நிலையில், அறவிடப்படவேண்டிய நிலுவைக் கட்டணம் 7.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், நீர்விநியோகத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.