இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஆளும் கூட்டணியின் 11 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் மருந்து பொருட்கள் இன்றி ஏற்படுகின்ற ஒவ்வொரு உயிரிழப்புக்கும் நிதியமைச்சரே பொறுப்பு கூறவேண்டும். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த போதிலும் தொடர்ந்தும் ரூபாவின் பெறுமதி ஒரே அளவில் காணப்பட்டது.
இதன் காரணமாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வங்கிகளுக்கு டொலர் அனுப்புவதை தவிர்த்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.