நடிகை சமந்தா, ஹிந்தி வெப் தொடரொன்றில் நடிகர் வருண் தவானுடன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த தொடரை இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டீ.கே ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.
அமெரிக்காவில் பிரபலமான சிட்டாடல் என்ற வெப் தொடரின் கதையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்படுகிறது.
இந்த தொடரில் நடிப்பதற்காக சமந்தா, சண்டை பயிற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இதற்கு முன் ‘ஃபேமிலி மேன் 2′ என்ற வெப் தொடரில் போராளியாக நடித்து உலகளவில் புகழ் பெற்றார்.
இந்த தொடரில் ஈழ தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகளும் கிளம்பின.
பின்னர் இதற்காக அவர் வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.