அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் அஜித், லைக்கா நிறுவனத்துடன் முதன் முதலாக இணையும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் அல்லது விஷ்ணுவர்தன் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.