Thursday, January 16, 2025
24.5 C
Colombo
அரசியல்பசிலுக்கு எதிரான மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பசிலுக்கு எதிரான மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய பதவிகளை வகிக்க சட்டரீதியாக எந்தத் தகைமைகளும் இல்லையென தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் மே 12ஆம் திகதி நீதிமன்றுக்கு விளக்கமளிக்க மீண்டும் அறிவித்தல் அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா முன்னிலையில் அழைக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, பிரதிவாதி பசில் ராஜபக்ஷவிடம் அறிவித்தல் கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும், வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ அல்லது அவரது சட்டத்தரணியோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இந்நிலையில், குறித்த வழக்கின் முதலாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்பி, வழக்கை எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதியரசர் உத்தரவிட்டடுள்ளார்.

வண. உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் பாரிய மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லசில் டி சில்வா ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles