எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (16) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சீர்கேடு குறித்தும் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.