நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் இந்தியா சென்றுள்ளார்.
அவர் இந்த பயணத்தின்போது, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கை திறைசேரி செயலாளர் எஸ் ஆர். ஆட்டிகல ஆகியோரும் கலந்துகொண்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான நிதி உதவிகள் சம்பந்தமாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.