Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
சினிமாவிஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்வது ஏன்? - பூஜா ஹெக்டே

விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்வது ஏன்? – பூஜா ஹெக்டே

‘பீஸ்ட்’ படத்தின் அனுபவங்களை பகிர்ந்த நேர்காணல் ஒன்றில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்வது ஏன்? என நடிகை பூஜா ஹெக்டே வினவியுள்ளார்.

விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் குறித்த தனது அனுபவங்களை ரசிகர்களுடன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது:

நான் விஜய்யை முதலில் பார்த்த போது மிகவும் ஆச்சரியமடைந்தேன். 64 படங்களில் நடித்துள்ள அவர் மிகவும் எளிமையானவராகவும் அன்பாகவும் இருக்கிறார். அதுமட்டுமின்றி நான் பணியாற்றிய கதாநாயகர்களில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர் விஜய் தான் என நினைக்கிறேன்.

படப்பிடிப்புக்கு சீக்கிரம் வருகிறார், பேக்கப் செய்யும் வரை இருக்கிறார். ஒரு நிமிடத்தை கூட அவர் வீணாக்குவதில்லை. இவ்வளவு கடின உழைப்பாளியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஒரு படத்தில் அவரது கதாபாத்திரம் மட்டுமின்றி மற்றவர்களின் கதாபாத்திரங்களும் பிரகாசிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவரை சூப்பர் ஸ்டார் என்று கூறினால் அது விஜய்தான் என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles