பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நுவரெலியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், கொவிட்-19 நிலைமை காரணமாக நாடு பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவமே நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.