Monday, April 21, 2025
30 C
Colombo
அரசியல்துஷ்பிரயோகமான நிர்வாகத்தினாலேயே மக்கள் இன்று அவதிப்படுகின்றனர் - கம்மன்பில

துஷ்பிரயோகமான நிர்வாகத்தினாலேயே மக்கள் இன்று அவதிப்படுகின்றனர் – கம்மன்பில

துஷ்பிரயோகமான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளினால் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று அவதியுறுவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

2021 இல் இலங்கை இறக்குமதிக்காக 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே எரிபொருள், எரிவாயு, நிலக்கரி மற்றும் மருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் கோரியபடி, ஒரு வருடத்திற்கு முன்னரே அத்தியாவசியமற்ற இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தால், மக்கள் இப்படி வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles