நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமது உத்தியோகப்பூர்வ இல்லத்தையும் வாகனத்தையும் அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
அவரது அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயற்பாடுகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அமைச்சுப் பொறுப்புகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப் போவதில்லை என்றும் அண்மையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் இல்லத்தை மீள கையளிப்பதே சரியானதாக தமக்குபடுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதாரரது சிறிய ரக வாகனம் ஒன்றை பயன்படுத்தவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.