நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்க மற்றும் டயனா கமகே ஆகியோருக்கு இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, புதிய போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி வெற்றிடத்திற்கு, அவர்களில் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.