Saturday, February 28, 2026
26 C
Colombo
சினிமாநயன்தாரா ரகசிய திருமணம்?

நயன்தாரா ரகசிய திருமணம்?

நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன், சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இதையடுத்து 2015ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில், நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது.

இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில், நயன்தாரா நெற்றியில் குங்குமத்துடன் இருப்பது போன்று தெரிகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக பதிவிட்டு, சமூக வலைத்தளங்களில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles