Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
சினிமாஐஸ்வர்யாவை புகழ்ந்த பிரபுதேவா

ஐஸ்வர்யாவை புகழ்ந்த பிரபுதேவா

ஐஸ்வர்யா தனது ‘பயணி’ இசை ஆல்பத்துக்கான படப்பிடிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இது ஹைதராபாத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது.

அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி, நெகிழ்ந்து பேசி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொளியை பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிரபுதேவாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles