Friday, October 31, 2025
31 C
Colombo
சினிமா'வாவ், செல்வா அத்தான்’:செல்வராகவனை பாராட்டிய ஐஸ்வர்யா தனுஷ்!

‘வாவ், செல்வா அத்தான்’:செல்வராகவனை பாராட்டிய ஐஸ்வர்யா தனுஷ்!

பிரபல இயக்குநர் செல்வராகவன் தற்போது தனுஷ் நடித்து வரும் ‘நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருவது மட்டுமின்றி ‘பீஸ்ட்’, ‘சாணிகாகிதம்’ உட்பட ஒரு சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘சாணிகாகிதம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் ஆரம்பித்து விட்டன.

அதற்கமைய, ‘சாணிகாகிதம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனை செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த போஸ்டருக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த பதிவிக்கு கமென்ட் செய்துள்ளார்.

அதில் ‘வாவ், செல்வா அத்தான்’ என்று குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்

கணவர் தனுஷை பிரிவதாக சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்த போதிலும் அவர் செல்வராகவன் மீது இன்னும் ஒரு மரியாதை கலந்த பாசத்துடன் இருக்கிறார் என்பது இந்த கமெண்ட் மூலம் தெரியவருகிறது.

ஏற்கனவே செல்வராகவன் பிறந்த நாளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வாழ்த்தை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles