Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
சினிமாமலையாள படத்தில் சூர்யா?

மலையாள படத்தில் சூர்யா?

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் பிறமொழி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

அந்த வரிசையில் நடிகர் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார்.

இதுபோல் தனுஷ் ‘வாத்தி’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனும் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இவர்கள் நடிக்கும் தெலுங்கு படங்களை தமிழிலும் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் சூர்யா நேரடி மலையாள படமொன்றில் நடிக்க தீர்மானித்துள்ளார்.

சூர்யாவுக்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் கேரளாவில் நல்ல வசூல் சாதனை படைத்து வருகின்றன.

‘எதற்கும் துணிந்தவன்’ படமும் கேரளாவில் வெளியாகிறது. இந்த படத்துக்கான ப்ரமோஷனில் பங்கேற்பதற்காக சூர்யா கேரளாவுக்கு சென்றிருந்தார்.

அந்த விழாவில் சூர்யா பங்கேற்று பேசும்போது, பிரபல மலையாள இயக்குநர் அமல் நீரத் என்னிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அவரது படத்தில் நான் நடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து சூர்யா நேரடி மலையாள படத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles