Wednesday, January 15, 2025
25.8 C
Colombo
சினிமாபவானிக்கும் அமீருக்கும் திருமணமா? விளக்கமளித்தார் பவானி

பவானிக்கும் அமீருக்கும் திருமணமா? விளக்கமளித்தார் பவானி

பிக்பொஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டியை, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் அமீர் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமணமா? என்பது குறித்த கேள்விக்கு பவானி விளக்கம் அளித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாவனி ரெட்டி கலந்து கொண்டார்.

அந்நிகழ்வில் உரையாற்றிய அவர்,‘முதல் வாரத்தில் இருந்து கடைசி வாரம் வரை நான் நோமினேஷன் செய்யப்பட்டேன், எனினும் எனக்கு கடைசி வரை வாக்களித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

அத்துடன், மகளிர் தினத்தில் அறிவுரை கூறும் அளவுக்கு நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்றும் ஆனால் ஒன்றை மட்டும் தன்னால் உறுதியாக சொல்ல முடியும் என்றும் பெண்கள் மீது எந்த விமர்சனம் வந்தாலும் அந்த விமர்சனத்தை தள்ளிவிட்டு நம் மனதிற்கு எது சரியோ அதை தைரியமாக செய்யுங்கள், எந்த பிரச்சனையும் வராது என்று கூறினார்.

மேலும் ஆண்கள் நம் வாழ்க்கைக்கு தேவை இல்லை என்றும் ஒருவேளை திருமணம் செய்து கொடுத்தாலும் கணவர் தான் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மாணவிகளில் சிலர், ‘அமீர் அமீர்’ என்று கூற உடனே “உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை போலவே எங்கள் வீட்டிலும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள், ஆனால் அமீருக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை. ஒருவேளை ஏதாவது இருந்தால் நிச்சயம் உங்களிடம் சொல்கிறேன்” என அவர் பதிலளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles