இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்று சொல்வதற்கு வாய்க்கூசுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (10) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், தற்போது இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்பதே உண்மை என்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, எரிவாயு இல்லை. டொலர் இல்லை.
வெளிநாட்டு ஒதுக்கத்தை விட, வெளிநாட்டுக் கடன்கள் அதிகமாக இருக்கின்றன.
இந்தநிலைமையை வங்குரோத்து என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த பிரச்சினை தொடர்பாக நிதி அமைச்சர் நாடாளுமன்றில் விளக்கமளிக்க வேண்டும்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாங்களும் இலங்கையர்களே. இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
நாடாளுமன்றில் கதைத்து இதற்கு அனைவரும் இணைந்து விரைவாக ஒரு தீர்வை காண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.