Thursday, September 18, 2025
25.6 C
Colombo
அரசியல்அனுமதி வழங்கினால் எம்.பிக்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வருகிறேன் - ஜயந்த கெட்டகொட எம்.பி

அனுமதி வழங்கினால் எம்.பிக்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வருகிறேன் – ஜயந்த கெட்டகொட எம்.பி

சபாநாயகர் அனுமதி வழங்கினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர முடியும் எனவும், நாடாளுமன்ற உணவகத்தை மூடுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உணவகத்தில் பாலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த அறிக்கை மீதான விவாதத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலின் சுருக்கம் வருமாறு:

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார:

நாடாளுமன்ற உணவகத்தில் ஏற்பட்ட பால் தொடர்பான பிரச்சினை என்ன? அப்படி ஏதாவது நிகழ்ந்திருந்தால் அது இங்குள்ள 225 பேருக்கும் நல்லதல்ல.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன:

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இது தொடர்பில் கருத்து வெளியிடுகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட:

பால் கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பதற்ற நிலை ஏற்படுத்தியதாக செய்தி வெளியாகியிருந்தது. நாங்கள் அதைப் பார்த்தோம். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோருகிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி:

நாடாளுமன்றத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் உள்ளது. எங்களுக்கு எதுவும் இல்லை என மக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இன்று நாடாளுமன்றத்தில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இல்லை.ஆனால் நாட்டு மக்களுக்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை நாங்கள் நன்கு அறிவோம். நமக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பால் பிரச்சனை உள்ளது. கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த நிலைமை சீர் செய்யப்பட வேண்டும். எம்.பி என்ற முறையில் நானும் இந்த குற்றச்சாட்டை எதிர்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட :

நாடாளுமன்ற உணவகத்தை மூடுங்கள். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து எம்மால் உண்ண முடியும். நாங்கள் இங்கு உண்பதற்காக வரவில்லை.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன:

அந்த அறிக்கையைப் பார்த்தேன். அதுபற்றி விசாரணை நடத்துவேன். இதை இனி ஒரு விவாதமாக மாற்றாதீர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles