நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவகத்தில் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதன் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக நேற்று (08) நாடாளுமன்ற உணவகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உணவு வழங்கல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் எமது செய்தி பிரிவு வினவிய போது, விநியோகஸ்தர்கள் சுமார் ஒரு மாத காலமாக நாடாளுமன்ற உணவகத்திற்கு பாலை விநியோகிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
மில்கோ நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், போதியளவு பால் விநியோகிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில உணவுப் பொருட்களை நாடாளுமன்றுக்கு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.