Tuesday, April 22, 2025
27 C
Colombo
சினிமாநடிகர் சூர்யா வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

நடிகர் சூர்யா வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு மேலதிக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்காக, சென்னை ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு ஏற்கனவே 5 காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், தற்போது மேலதிக பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles