நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இணைந்து விட்டோம் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் தற்போது ‘வாத்தி’ என்ற தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் தங்கி இருந்தார்.
இதன் காரணமாக சென்னைக்கு செல்லாமல் இருந்த தனுஷ், தற்போது அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் .
சென்னையில் உள்ள தனது வீட்டில் தனக்காக காத்திருந்த செல்ல நாய்க்குட்டிகளை நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பார்த்து அவைகளுடன் கொஞ்சி விளையாடும்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்த செல்லப் பிராணிகளுடன் இணைந்து உள்ளதை அடுத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
தனுஷ் நடித்து முடித்துள்ள ‘மாறன்’, ‘தி க்ரே மேன்’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.