ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (08) இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்னதாக முன்வைக்கப்பட்ட 15 யோசனைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதோடு அவர்களில் 2 அமைச்சர்களும் 3 இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகின்றனர்.
இந்நிலையில் இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தற்போதைக்கு அரசாங்கத்திலிருந்து விலகும் தீர்மானம் இல்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருக்கின்ற சில கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.