Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
சினிமாஇயக்குநர் பாலா விவாகரத்து!

இயக்குநர் பாலா விவாகரத்து!

இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இவர், ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது மீண்டும் பாலா – சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது.

‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு பாலா – சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநர் பாலாவும், அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கின்றனர்.

கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் திகதியன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது. 18 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles