தற்போதைய நிதியமைச்சர் அமைச்சராக இருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை பதவியொன்றை வகிக்கத் தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மிகவும் முன்னோடி அர்ப்பணிப்புடன் நாங்கள் ஒரு ஆட்சியை உருவாக்கியுள்ளோம். அந்த ஆட்சியின் உரிமையிலிருந்து நாம் தப்ப முடியாது. அத்துடன், நாட்டின் பொருளாதாரம், அந்த ஆட்சிக்கு எதிர் திசையில் பயணிக்குமாயின், அதற்கு எதிராக செயற்பட நாம் கடமைப்பட்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
கேள்வி. உங்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?
“நிதியமைச்சர், அமைச்சர் பதவி வகிக்கும் அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பதற்கு எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதற்குக் காரணம் இன்று இந்த நாட்டை ஆட்சி செய்வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்ல. கிடைத்த மக்கள் வரத்தை கொள்ளையடித்து இந்த நாட்டை ஆட்சி செய்வது அமெரிக்கரான பசில் ராஜபக்ஷ ஆவார். ஒரு அமெரிக்கர் நாட்டை ஆட்சி செய்வதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.”
கேள்வி.அனைத்து தெரு விளக்குகளையும் அணைக்க வேண்டும் என நிதியமைச்சர் தெரிவித்ததுடன், போதியளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதால் மின்சாரம் தொடர்பில் பிரச்சனை எதுவும் இல்லை என மின்சக்தி அமைச்சர் கூறினார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
“அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து நாட்டை மீட்பதற்காக நிதியமைச்சர் செயற்படவில்லை. அத்துடன் அவர் அந்நியச் செலாவணி நெருக்கடியை பேரழிவை நோக்கி கொண்டு செல்கிறார்”