Thursday, September 19, 2024
28 C
Colombo
சமையல் குறிப்புகள்மீல் மேக்கர் கட்லட் செய்வது எப்படி?

மீல் மேக்கர் கட்லட் செய்வது எப்படி?

அசைவம் சாப்பிடாதவர்கள் மீல் மேக்கரில் சூப்பரான வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மீல் மேக்கரில் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மீல் மேக்கரில் கட்லெட் செய்வது எப்படி?

மீல் மேக்கரில் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்

மீல் மேக்கர் – 100 கிராம்
பொட்டுக் கடலை மாவு – அரை கப்
பெரிய வெங்காயம் – 1
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
கறி மசாலா – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூம் – கால் தேக்கரண்டி
சோள மாவு – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

மீல் மேக்கர் கட்லெட் செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெந்நீரில் மீல் மேக்கரை அரைமணிநேரம் ஊறவைத்த பின்னர் அரைப்பாணில் போட்டு அரைத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், கறிமசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் அரைத்த மீல் மேக்கரை போட்டு கட்லெட் மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கட்லெட் போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

Keep exploring...

Related Articles