Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
சினிமாமீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொவிட் தொற்று உறுதியான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

“கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தேன். தற்போது மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் இந்த மருத்துவமனையின் மருத்துவர்களை சந்திக்கும் போது மிகுந்த ஆற்றலும் மன உறுதியும் கிடைத்தது போல் இருக்கிறது. குறிப்பாக மருத்துவர் ப்ரீத்தியுடன் பேசும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் மருத்துவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய மியூசிக் ஆல்பம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த மியூசிக் ஆல்பம் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles