பொலிவூட் நடிகையான சன்னி லியோன் அவ்வபோது தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அவர் தற்போது தமிழில் ‘வீரமாதேவி’, ‘ஓ மை கோஸ்ட்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கவுள்ளதுடன், சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தில் விஷ்ணு மஞ்சு, நாகேஸ்வர ராவ் என்ற கதாபாத்திரத்திலும், சன்னி லியோன், ரேணுகா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தலைப்பு உட்பட ஏனைய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரிவித்துள்ளார்.