Tuesday, March 18, 2025
26 C
Colombo
அரசியல்விமல் வீரவங்சவின் வழக்கு விசாரணை திகதியிடப்பட்டது

விமல் வீரவங்சவின் வழக்கு விசாரணை திகதியிடப்பட்டது

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசேன் இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக வளாகத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது, குறித்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

குறித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரோஜர் செனவிரட்ன ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles