Monday, May 5, 2025
30 C
Colombo
சினிமா'பிக்பொஸ் சீசன் 1' போட்டியாளரின் கணவர் தலைமறைவு - தேடுதல் வேட்டையில் காவல்துறை

‘பிக்பொஸ் சீசன் 1’ போட்டியாளரின் கணவர் தலைமறைவு – தேடுதல் வேட்டையில் காவல்துறை

தமிழில் ஒளிப்பரப்பான ‘பிக்பொஸ் சீசன் 1’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆர்த்தியின் கணவர் திடீரென தலைமறைவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷின் மகிழுந்து, சாலையில் உள்ள தடுப்பில் மோதி, திடீரென தலைமறைவாகி விட்டதால் அவரை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.

நேற்றிரவு பட்டினப்பாக்கம் சாலையில் வைத்து நடிகர் கணேஷின் மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் உள்ள தடுப்பில் மோதியுள்ளது. இதன்போது இரு சக்கர வாகனமொன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து நடிகர் கணேஷ் தப்பி சென்று விட்டதாகவும் தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கணேஷின் மனைவியான ஆர்த்தி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை தேடி வருவதுடன், தலைமறைவாகியுள்ள அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles