பிஸ்கட் புட்டிங் என்பது எளிமையான பொருட்களை கொண்டு தயாரிக்கக்கூடிய ஒரு சுவையான சிற்றூண்டியாகும்.
பிஸ்கெட் புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்
பாகு தயாரிப்பதற்கு
சீனி – ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் – அரை மேசைக்கரண்டி
அரைப்பதற்கு
ஏதாவது ஒருவகை பிஸ்கெட் – 10 (பெரிதாக இருந்தால்) அல்லது 20 (சிறிதாக இருந்தால்)
சீனி – அரை மேசைக்கரண்டி
ஏலக்காய் – 5
புட்டிங் செய்வதற்கு
முட்டை – 2
நெய் – அரை மேசைக்கரண்டி
காய்ச்சி ஆற வைத்த பால் – 2 மேசைக்கரண்டி
செய்முறை
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் நீர் மற்றும் சீனியை சேர்த்து கலக்கவும்.
பாகு தங்க நிறத்தில் வரும் வரை காய்ச்சி, அதை அடிகனமான சிறிய பாத்திரத்தில் ஊற்றவும். பிஸ்கெட், சீனி, ஏலக்காய் மூன்றையும் அரைப்பானில் போட்டு மா போல பொடித்து கொள்ளவும். பின்பு அதை சலித்து எடுத்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து(முடிந்தால் முட்டை அடிக்கும் கருவி கொண்டு அடிக்கலாம்), அதனுடன் பிஸ்கெட் கலவையை சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும். 2 நிமிடங்களுக்கு பின்னர் இந்த கலவையை சீனி பாகு இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி மூட வேண்டும்.
பின்பு அடுப்பில் இட்லி குக்கரை வைத்து, அதனுள் முட்டை கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து பாத்திரத்தின் அடி தொடும் வரையில் குக்கரில் தண்ணீர் ஊற்ற விட வேண்டும். அதன் பின்னர் மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை கலவை வேக வேண்டும்.
அடுப்பை அணைத்த பின்னர் 15 நிமிடங்கள வரை புட்டிங்கை நன்றாக ஆறவிடவும். புட்டிங் உள்ள பாத்திரத்தின் ஓரங்களை கத்தியை கொண்டு பாத்திரத்தில் புட்டிங் ஒட்டாதவாறு இளக்கி கொள்ளவும். பிறகு பாத்திரத்தின் மேல் ஒரு தட்டை வைத்து பாத்திரத்தை அதன் மீது கவிழ்க்கவும்.
அதன் பின்னர் அதனை துண்டங்களாக்கி பரிமாறிக் கொள்ளவும்.