முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிணை முறி வழக்கில் இன்று (04) நீதிபதிகள் ஆயம் தீர்மானமொன்றை அறிவித்துள்ளது.
இதன்படி, பிணைமுறி வழக்கில் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தின் பெரும்பான்மை தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.