சில அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கைமைய, புதிய வலுசக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், கைத்தொழில் அமைச்சராக தினேஸ் குணவர்தனவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் பல முக்கிய அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.