Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் உள்ளிட்ட இருவர் மரணம்

மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் உள்ளிட்ட இருவர் மரணம்

March 2, 2022 – 7:54am

திருகோணமலை – உவர்மலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் எனும் 15 வயது சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த மற்றைய இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த டி.டபிள்யூ. திசறு அமீக்ஷண எனும் 20வயது சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் சடலங்கள் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் – அப்துல் சலாம் யாசீம்)

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles