Thursday, April 3, 2025
24 C
Colombo
சமையல் குறிப்புகள்சிக்கன் பிரியாணி செய்முறை

சிக்கன் பிரியாணி செய்முறை

சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை சமைக்கும் எளிமையான செய்முறை கீழ்வருமாறு:

சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 2 டம்ளர்
சிக்கன் – 500 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி மற்றும் புதினா – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
கறுவாப்பட்டை – 2
லவங்கம் -5
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 4
சீரகம் – 1 தேக்கரண்டி
தயிர் -2 தேக்கரண்டி

சிக்கன் பிரியாணி செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் . தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் மல்லியிலை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதில் சிக்கன் போட்டு 5 நிமிடங்கள் வரை அதனை நன்றாக வதக்கவும். வதங்கியதுதும் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவேண்டும். குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான பிரியாணி தயார்.

கவனத்திற்கு: இது இருவரின் நுகர்வுக்கு போதுமானது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles