Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுசர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு இடைக்கால தடை

சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு இடைக்கால தடை

March 2, 2022 – 8:12am

சர்வதேச கால்பந்து சங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் கூட்டாக நடவடிக்கை எடுத்துள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று, விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் தேசிய மற்றும் உள்ளூர் கால்பந்து அணிகள் சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப் படுவதாக சர்வதேச கால்பந்து சங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபா உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் ரஷ்யாவுடன், போலந்து விளையாடாது என அந்நாட்டு கால்பந்து சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles