அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் கடந்த 24 ஆம் திகதியன்று வெளியானதுடன், இந்த படம் நான்கே நாட்களில் 100 கோடி வசூலை தாண்டி, வெற்றிகரமாக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் ‘வலிமை’ திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இருப்பதாகவும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.