ரஷ்யா மற்றும் பெலாருஸ் நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு தடைவிதிக்குமாறு சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கும் பெலாருஸ் ஆகிய நாடுகள் மீது நடவடிக்கைளை எடுத்துள்ளது.
ரஷ்யா மற்றும் பெலாருஸ் நாட்டுப் பிரதிநிகளாக அந்நாட்டு விளையாட்டு வீரர்களோ, விளையாடு அதிகாரிகளோ பங்கேற்பதை அனுமதிக்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் குழு பரிந்துரைத்துள்ளதுடன், ரஷ்யா அல்லது பெலாருஸ் நாட்டைச் சேர்ந்த தனி நபரோ அல்லது அணியோ அவர்களை நாடற்ற வீரர் அல்லது நாடற்ற அணியாக பங்குபற்றும் நிலையில் அவர்களை இணைக்க அனுமதிப்பதுடன், அந்நாடுகளின் தேசிய சின்னமோ, நிறமோ, கொடியோ அல்லது கீதமோ காட்சிப்படுத்தக் கூடாது என அக்குழு தமது பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.