Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுமர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கிண்ண கால் பந்தாட்டம் முதல் ஆட்டத்தில் அல் அஷ்ரக் அணி வெற்றி

மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கிண்ண கால் பந்தாட்டம் முதல் ஆட்டத்தில் அல் அஷ்ரக் அணி வெற்றி

March 1, 2022 – 5:44pm

புத்தளம் நகரசபையின் ஏற்பாட்டில் புத்தளம் கால் பந்தாட்ட சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கால் பந்தாட்டத் தொடரின் முதல் ஆட்டத்தில் புத்தளம் அல் அஷ்ரக் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி வெள்ளிக்கிழமை மாலை (18) புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

பலம் வாய்ந்த நியூ ஸ்டார்ஸ் அணி யினை புத்தளம் லீக்கில் புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ள அல் அஷ்ரக் அணி 03 :02 கோல்களினால் வெற்றி கொண்டதன் மூலம் அவ் அணி 03 புள்ளிகளை பெற்றுள்ளது.

அல் -அஷ்ரக் அணிக்காக என்.எம்.நுஷ்கி, வீ. யோவான், எம்.எம். சபாக் ஆகியோர் முறையே 01 ம், 29 ம், 70 ம் நிமிடங்களில் தமது அணிக்கான கோல்களை பெற்றுக் கொடுத்தனர்.

அல் -அஷ்ரக் அணியானது புத்தளம் லீக்கில் பதிவு செய்யப்பட்டு தனது முதலாவது போட்டியில் முதலாவது நிமிடத்தில் முதலாவது கோலை செலுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் நடைபெற்ற தொடரின் ஆரம்ப நிகழ்வில் அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன கலந்து கொண்டார்.

(புத்தளம் தினகரன் நிருபர்)

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles