பொரளை புனித பரிசுத்தவான் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான வைத்தியர் உள்ளிட்ட 3பேரினது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
பொரளை புனித பரிசுத்தவான் தேவாலயத்திலிருந்து கடந்த ஜனவரி 11ஆம் திகதி கைக்குண்டொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபரான ஓய்வுபெற்ற வைத்தியர் ஜனவரி 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.