TNAக்கு ஆதரவாக கருத்து முன்வைப்பு
பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலகட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் யோசனையைக் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்குவேன் எனவும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள நிலைமையிலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பது முறையற்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.